3 மொழிகளில் வெளியாகிறது ’வலிமை’ திரைப்படம்

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அப்படம் 3 மொழிகளில் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டில் பெரிது எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘வலிமை’யின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதிக சண்டைக் காட்சிகளால் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கைத் துறையினர் யுஏ சான்றிதழ் வழங்கினர். 

இந்நிலையில், தற்போது ’வலிமை’ திரைப்படம் தமிழ். தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ஜன.13 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும், ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>