4-ம் நாள்: 4 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையும் படிக்கஇந்திய அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 305 ரன்கள் இலக்கு

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. எய்டன் மார்கிரமை 1 ரன்னுக்கு போல்டாக்கினார் முகமது ஷமி. கீகன் பீட்டெர்சன் ஓரளவு தாக்குப்பிடித்து 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராசி வாண்டர் டுசனும் தாக்குப்பிடித்து விளையாடி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால், நைட் வாட்ச்மேனாக கேசவ் மகாராஜ் களமிறக்கப்பட்டார். அவரும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுடன் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கேப்டன் டீன் எல்கர் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 211 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>