5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‘டும் டும்’ பாடல்

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ‘எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டும் டும்’ பாடல் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

கடந்த தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியான ‘எனிமி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வியாபார ரீதியில் வெற்றியடைந்தது.

முக்கியமாக இப்படத்தில் தமன் இசையமைப்பில் மிருனாளினி நடனத்தில் உருவான ‘டும் டும்’ பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது. பின் ஒரு மாதத்திற்கு முன் யூடியூப்பில் வெளியிடப்பட்ட ‘டும் டும்’ பாடல் இதுவரை பார்வையாளர்களால் 5.1 கோடி முறை பார்க்கப்பட்டிருக்கிறது. 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>