5 பிரபல இயக்குநர்களின் 'புத்தம் புது காலை விடியாதா' டிரெய்லர் வெளியானது

ஐந்து தனித்தனி கதைகளை உள்ளடக்கிய புத்தம் புது காலை திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என 5 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதனை ஹலிதா சமீம்,பாலாஜி மோகன், ரிச்சர்டு ஆண்டனி, சூர்ய கிருஷ்ணா, மதுமிதா ஆகியோர் இயக்கியுள்ளனர். 

இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் அபிநய் பெயரை நீக்கிய மனைவி: உருவான விவாகரத்து சர்ச்சை

இந்தத் தொடரில் நதியா, ஜோஜு ஜார்ஜ், ரித்திகா, கௌரி கிஷன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, டிஜே அருணாச்சலம், லிஜோ மோல் ஜோஸ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜனவரி 14 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் விடியோவில் வெளியாகிறது. தற்போது இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>