500 பேரிடம் ஒரே சமயத்தில் பேச வேண்டுமா? இதோ வந்துவிட்டது சோமா வீடியோ கால் மற்றும் சாட்!

app

ஒவ்வொரு நாளும் புத்தம் புது ஆப்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. Soma Free Video Call and Chat என்ற ஆப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு உடனே தரவிறக்கினேன். அதென்ன சோமா?

உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்காக அல்லது அலுவலக வேலைக்காகவோ ஒரு பெரிய கூட்டத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டியதாக இருந்தால் கவலை வேண்டாம். சோமாவை முதலில் இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் மூலம் ஒரே சமயத்தில் நீங்கள் 500 நபர்கள் வரை குரூப் சாட்டிங் செய்ய முடியும். அதுவும் முற்றிலும் இலவசமாகவே!

வீடியோ சாட்டிங் வசதியும் உள்ளது. பேசுங்க பேசுங்க…பேசிட்டே இருங்க….என்று சொல்லாமல் சொல்கிறது இந்த ஆப். மேலும் இந்தச் செயலியில் டுடுல் கேமரா என்ற வசதி உள்ளது. நிகழ்ச்சியை போட்டோ எடுத்து அப்படியே பகிர்ந்து கொள்ளலாம். ஃபோட்டோவில் பலவிதமான மாற்றங்களையும் செய்து கொள்ளலாம். வண்ணக் கலவைகள் மட்டுமல்லாமல் ஃபன்னி ஸ்னாப் ஷாட் வசதிகளும் இதில் உள்ளது.

உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக மேலும் மெருகேற்ற பலவிதமான ஸ்டிக்கர்கள் மற்றும் ஜிஃப் (Gif) இமேஜ்கள் உள்ளது. சோமாவின் உதவியால் உங்களுடைய உரையாடல்களில் கவிநயம் உள்ளதோ இல்லையோ கலை நயம் நிச்சயம் இருக்கும். நீங்கள் கேம் பிரியர்களாக இருந்தால் எண்ணற்ற புதுப் புது கேம்களை விளையாடி மகிழ்வதுடன் அவற்றையெல்லாம் சேமித்து வைக்கவும் இந்த செயலி உதவுகின்றது. 

இது தவிர சோமோ வெப் மூலம் கணினி இணைய இயங்குதளத்திலும் நீங்கள் தகவல்களை உடனுக்கு உடன் அனுப்பி மகிழலாம்.   

என்ன! அதற்குள் சோமாவை டவுன்லோட் செய்துவிட்டீர்களா!

<!–

–>