‘83’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அறிவித்த தில்லி அரசு

இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 83 திரைப்படத்திற்கு தில்லி அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங் நடித்துள்ளார்.

இதையும் படிக்க | 5 ஆண்டுகளில் 321 துப்புரவு பணியாளர்கள் பலி: மத்திய அரசு தகவல்

ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். 83-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் 24 அன்று 83 படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்து தில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>