9 பேருக்கு கரோனா: பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அணி டிசம்பர் 9-இல் பாகிஸ்தானின் கராச்சி வந்ததிலிருந்து இதுவரை 9 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்கதமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேலும் தெரிவித்தது:

“வியாழக்கிழமை காலை மீதமுள்ள 15 மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் 6 பேருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த 21 பேருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், டி20 ஆட்டம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை நடைபெற்றது.

எனினும், இரு அணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மேற்கிந்தியத் தீவுகளிடமுள்ள வளங்களையும் கருத்தில் கொண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் அங்கமான இந்த ஒருநாள் தொடரை ஜூன் 2022 தொடக்கத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.”

புதன் மற்றும் வியாழன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே கராச்சி டி20 ஆட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து புறப்படுகின்றனர். மற்றவர்கள் தனிமைக் காலத்தை முடித்த பிறகே புறப்படுவார்கள்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>