95 நாட்களுக்கு பிறகு நடக்க முயற்சிக்கும் யாஷிகா: விடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி

கடந்த ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்புகள் உடைந்தன. இதற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது உருக்கமாக பதிவிட்டு வந்தார். 

இதையும் படிக்க | இது விதியா ? விதிமீறலா ?: பிக்பாஸில் விசாரிக்கவிருக்கும் கமல்

இந்த நிலையில் கைபிடி உதவியுடன் நடக்க முயற்சித்து வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது, குழந்தையின் நடை. 95 நாட்களுக்கு பிறகு நம்பிக்கை, வேண்டுதல்களால் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.

என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. என்னை நன்றாக கவனித்துக்கொண்ட செவிலியர் ஹேமா மற்றும் பிஸியோதெரபிஸ்ட்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>